சொகுசு காரில் இரவு நேரங்களில் வலம் வந்து ஆடுகளை திருடிய 3பேர் கைது

by Staff / 02-02-2024 03:51:45pm
சொகுசு காரில் இரவு நேரங்களில் வலம் வந்து ஆடுகளை திருடிய 3பேர் கைது

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதிகளில் இரவு நேரங்களில் ஆடுகள்  திருடு போவதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் கேரளா மாநிலம் அச்சம் புதூர் பதியைச் சேர்ந்த அஸ்கர், நவ்ஃபுல், சாதிக் ஆகிய மூன்று பேர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் கேரளாவில் இருந்து வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு இரவு நேரங்களில் தென்காசி மாவட்ட பகுதிகளில் சுற்றி தெரிந்து வீடுகள் மற்றும் தொழுவங்களில் கிடந்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியது தெரிய வந்தது.

மேலும் திருடிய ஆடுகளை கேரளா மாநில ஆட்டுச் சந்தைகளில் விற்பனை செய்து சம்பாதித்து வந்தவர்களை செங்கோட்டை மற்றும் அச்சம் புதூர் போலீசார் இணைந்து செங்கோட்டை காவல் சரகம் ராஜபுரம் காலனி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ஆடுகளை விற்ற பணம் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து  நடவடிக்கையை மேற்கொண்டனர்

சொகுசு காரில் இரவு நேரங்களில் வலம் வந்து ஆடுகளை திருடிய 3பேர் கைது
 

Tags :

Share via

More stories

Logo