போலீஸ் எஸ்ஐ திடீர் மரணம் - என்ன காரணம்

by Staff / 03-05-2024 05:33:30pm
போலீஸ் எஸ்ஐ திடீர் மரணம் - என்ன காரணம்

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் காளி பிரசாத் (58). இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம் எல்லரெட்டிப்பேட்டை கலால் நிலையத்திற்கு பணி மாறுதலில் வந்தார். இந்நிலையில், இன்று அவரது வாடகை வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காளி பிரசாத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via