மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்த இயலாது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு.

by Editor / 22-07-2024 09:37:39pm
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்த இயலாது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு.

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (ஜூலை 22) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசு எடுத்து நடத்த இயலாது. தேயிலை தோட்டத்தை டான் டீ நிர்வாகத்திற்கு வழங்குவது சாத்தியமற்றது” என்று வாதிட்டார்.இந்நிலையில், தமிழக அரசு மற்றும் டான் டீ நிர்வாகம் ஆலோசித்து இரண்டு நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

Tags : மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்த இயலாது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு.

Share via