நெல்லையில்  மினி டைட்டல் பார்க்   -அமைச்சர் தங்கம் தென்னரசு 

by Editor / 05-07-2021 07:13:12pm
நெல்லையில்  மினி டைட்டல் பார்க்   -அமைச்சர் தங்கம் தென்னரசு 

 

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தொழில் வளர்ச்சிக்கான ஆய்வுக் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், நாங்குநேரி , கங்கைகொண்டான் தொழில் நுட்ப பூங்கா வளர்ச்சிப் பணிகள் குறித்தும் 2 மாவட்ட வர்த்தக நிறுவன த்தினர், தொழில்முனைவோர்கள் , வர்த்தகசபை தலைவர்கள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார் . 
தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்., நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை முன்னிலைப் படுத்தி நெல்லை தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும், புதிய தொழில் தொடங்குவதற்கு ஒன்றை சாரளமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. 
இதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இனிமேல் தொழில் எளிதாக தொடங்கும் வகையில் இந்த முறை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப் படும் . தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தென் மாவட்டங்களில் நடத்த முதல்வரோடு ஆலோசனை நடத்தி ஏற்பாடு செய்யப்படும். 
2020&-21 ஆண்டு புதியதொழில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை கங்கை கொண்டான் தொழில் நுட்ப பூங்காவை மையப்படுத்தி மினி டைட்டல் பார்க் அமைக்கப்படும்.
தடுப்பூசியை தமிழகமே தயாரிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி தயாரிப்பு செய்வதற்கான அனுமதி வழங்க கூடியது மத்தியரசு கையில் உள்ளது.  தமிழக முதல்வர் பிரதமரை நேரில் சென்று தடுப்பூசி மையம் தொடர்பாக வலியுறுத்தினார். அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை அப்படியே உள்ளது. தடுப்பூசி தயாரிப்பு செய்வது தொடர்பாக மத்திய அரசின் முடிவை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டு அந்த பணிகள் மட்டும் நடந்து வருகிறது. தமிழகத்தின் முதன் முதலாக தொடங்கப்பட்ட நூற்பாலையில் ஆய்வு நடத்தப்பட்டு புதிய தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பலநாட்டின் தூதர்கள் ,பெரிய நிறுவன ங்களின் உயர்மட்ட அதிகாரிகள் முதல்வரைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் தெரிவித்ததுடன் கொரோனா காலத்தில் தொழில்சாலைகள் தடையின்றி இயங்கவும் , ஏற்றுமதி செய்யவும் சிறப்பாக நடவடிக்கை எடுத்த முதல்ருக்கு பாராட்டும் தெரிவித்ததாக கூறினார் 

 

Tags :

Share via