இன்று த.வெ.க தோ்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று மூன்று மணி அளவில் முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். விவசாயி ஒருவர் பெற்றுக் கொண்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்த நிகழ்வு நடந்தது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சில முக்கிய வாக்குறுதிகள்.
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டுவரப்படும்
தகுதியுள்ள ஏழை மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். 500 படைப்பாற்றல் பள்ளிகள் அமைக்கப்படும்.
வேலைவாய்ப்பற்ற 29 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு மாத 4000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு 2000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.
காவலர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18,200 இல் இருந்து 25,000 ஆக உயர்த்தப்படும். அவர்களுக்கு வார விடுமுறை மற்றும் பெண் காவலர்களுக்கு பிரத்யோக ஓய்வறைகள் உறுதி செய்யப்படும்.
போதைப் பொருள் இல்லாத மாநிலத்தை உருவாக்குதல் மற்றும் மாணவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை போன்ற வாக்குறுதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
Tags :



















