கள்ளச்சாராய உயிரிழப்பு 66 ஆக உயா்வு

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த ஜூன் 18, 19-ஆம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியவர்களில் 229 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இவர்களில் மொத்தம் 65 பேர் உயிரிழந்தனா். தற்போது புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் (41) புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
Tags :