இரண்டாம் நாள் அதிமுக ஆய்வு கூட்டம் தொடங்கியது

by Staff / 11-07-2024 11:20:07am
இரண்டாம் நாள் அதிமுக ஆய்வு கூட்டம் தொடங்கியது

சென்னை ராயப்பேட்டையில், மக்களவை தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஜூலை 11) இரண்டாம் நாள் அதிமுக ஆய்வு கூட்டம் தொடங்கியது. இதில், சிவகங்கை மற்றும் வேலூர் தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் செல்போனுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories