அம்பேத்கர் சட்டப் பல்கலையின் முதல் துணைவேந்தர் கொரோனாவால் மரணம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் நாகபூஷணம் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 1997ல் தொடங்கப்பட்டபோது அதன் முதல் துணைவேந்தராக நாகபூஷணம் நியமிக்கப்பட்டார். சென்னை கொளத்தூரில் பிறந்த நாகபூஷணம், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு, சென்னை பல்கலையில் எம்எல் மற்றும் பிஎச்டி ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். 1977 முதல் 88 வரையிலும் சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி இருக்கிறார். 97ல் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்ட நாகபூஷணம் 2000ம் ஆண்டு வரை துணைவேந்தராக பதவி வகித்திருக்கிறார் .நாகப்பூ சங்கத்தின் மறைவுக்கு சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ்குமார் பல்கலை பேராசிரியர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags :