"கொரோனா தடுப்பூசி பார்முலாவை இந்தியாவுக்கு தரமாட்டோம்"!

by Editor / 06-05-2021 10:28:33am

கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசி பார்முலாவை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு தரமாட்டோம் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது அசுர வேகத்தில் பரவி வருகிறது.இதனால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகிறது. மேலும், கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே,கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த அனைத்து நாடுகளும் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. எனினும்,கொரோனா தடுப்பு மருந்துகள் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும்,தற்போது பயன்படுத்தப்படும் கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் கொரோனாவைக் கட்டுப்படுத்தி வருகின்றன.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டா ஜென்கா நிறுவனமும் இணைந்துதான் இந்த கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகளை தயாரித்தன.

ஆனால்,இந்தியாவில் மத்திய அரசானது சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன.இருப்பினும்,தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் தாமதம் ஆவதால்,தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் சரியான நேரத்தில் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இதனால்,கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசி பார்முலாவை மற்ற நாடுகளுக்கும் கொடுத்து உதவுவது பற்றி உலகப் பணக்காரர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸிடம் கேட்டபோது, "கொரோனா தடுப்பூசி காப்புரிமையை இந்தியா போன்ற வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை.

ஏனெனில், தடுப்பூசி தயாரிக்கத் தேவைப்படும் தொழில்நுட்பங்கள் மிகவும் விலையுயர்ந்தது.இவை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இல்லவே இல்லை.எனவே,எங்கள் நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கி கொடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.அதுமட்டுமல்லாமல்,தடுப்பூசி தயாரிப்புக்காக நாங்கள் மெலிண்டா கேட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பெரும் முதலீடு செய்துள்ளோம்",என்று கூறினார். மக்கள் அனைவரும் கொரோனாவால் இறந்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் பில்கேட்ஸ் இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via