நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி

by Staff / 23-02-2024 02:05:23pm
நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி

வெனிசுலாவில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பொலிவார் மாநிலத்தின் கிராமப்புற பகுதியில் உள்ள புல்லா லோகா சுரங்கத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. மீட்புக் குழுவினர் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டனர். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

 

Tags :

Share via