விஷாலுக்கு சென்னை மேயர் பிரியா பதிலடி

by Staff / 05-12-2023 03:54:32pm
விஷாலுக்கு சென்னை மேயர் பிரியா பதிலடி

சென்னை மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இது ஒரு கேவலமான விஷயம் என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில் விஷாலுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா X தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில், ''பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்'' என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo