மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு..?

by Editor / 24-02-2024 07:00:47pm
மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு..?

திமுக கூட்டணியில் மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக ஆகிய 3 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், 3 கட்சிகளுக்கும் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் திமுக மும்முரம் காட்டி வருகிறது. திமுக தவிர பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன.

 

Tags : மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக

Share via