சதுரகிரி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

by Staff / 08-03-2024 01:45:46pm
சதுரகிரி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்த பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது.இந்த கோயிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் பல்வேறு பகுதிகளி ம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.மாசி மாத பிரதோஷம், மகாசிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 11ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளித்துள்ளனர்.
இன்று பிரதோஷம் மற்றும் ஸ்ரீமகாசிவராத்திரியை முன்னிட்டு விருதுநகர், மதுரை , திருச்சி, நெல்லை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவில் அடிவாரப் பகுதியில் அதிகாலை முதலே குவிந்தனர். பின்னர் பக்தர்கள் காலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்டு மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo