கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

மேற்குவங்கம், ஜார்கண்டில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாகவும், இதன் காரணமாக இன்றும் (ஆக., 02) நாளையும் (ஆக., 03) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags :