கொரோனா தடுப்பு - தலைமைச் செயலாளர் ஆலோசனை

by Editor / 30-08-2021 04:40:49pm
கொரோனா தடுப்பு - தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காணொலி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கு முன்னதாக பள்ளிகள் திறப்பு மற்றும் ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று காலை தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். 

 

Tags :

Share via

More stories

Logo