ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக தீர்மானம் நிறைவேற்றம்

தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படும் மத்திய அரசின் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறைப்படி ஒதுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Tags :