கழிப்பறைக்குள் தங்க வைப்பதுதான் திமுக அரசின் சமூக நீதியா பாமக தலைவர் அன்புமணி கேள்வி

தூய்மைப் பணியாளர்கள் கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்ட சம்பவத்தில், இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? என பாமக தலைவர் அன்புமணி கேள்வியெழுப்பியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ள அவர், திருப்பூர் மாநகராட்சியில் கழிப்பறைக்குள் தங்கியபடியே தூய்மைப்பணியாளர்கள் சமைத்து, உண்டு, உறங்கி வந்திருக்கின்றனர் என்ற செய்தியால் நெஞ்சம் பதறுகிறது. மிகக் கொடுமையான இந்த குற்றத்தில் ஒப்பந்ததாரரின் மீது பழியைப் போட்டு அரசு தப்பிவிடக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
Tags :