திருமண மண்டப திறப்பு விழாவிற்கு பறை இசை வாசிக்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு.

by Staff / 01-09-2025 09:49:53am
திருமண மண்டப திறப்பு விழாவிற்கு பறை இசை வாசிக்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு.

மதுரை மாவட்டம் வலையங்குளத்தை சேர்ந்த சின்னதம்பி - பொன்னம்மாள் தம்பதியின் மகன் அழகர் (எ) அஜய் 19வயதான இளைஞர். இவர் பறை இசை வாசிக்கும் தொழில் செய்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று வலையங்குளம் பகுதியில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா நடைப்பெற்றது. அதற்கு  பறையிசை வாசிக்க அஜய் உள்ளிட்ட குழுவினருடன் பறை அடிக்க சென்றுள்ளார்.அப்போது அங்கு வந்த இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவரை அழைத்து சென்ற நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை பார்த்து சிலர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக பெருங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து  உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌.தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என இறந்த அஜயின் பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.

 

Tags : திருமண மண்டப திறப்பு விழாவிற்கு பறை இசை வாசிக்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு.

Share via