ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

by Staff / 05-06-2022 02:13:06pm
ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் கட்சியை வலுப்படுத்தும் வகையில் தமது அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கிறாரர்  இதற்காக அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஓடிசாவில் வரும் 2024 ஆம் ஆண்டில் நடக்க உள்ள மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட உள்ளது. சட்டசபை சபாநாயகர் சூரிய நாராயணன் பட்ரோவாவும்  தன் பதவியை ராஜினாமா செய்தார் பல புதிய முகங்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க நவீன் பட்நாயக் திட்டமிட்டுள்ளார்.

 

Tags :

Share via