தமிழக வெற்றி கழக விருப்ப மனுக்களை தயாா் செய்து சமர்ப்பிர்க்க பிப்ரவரி 20, 2026 அன்று கடைசி நாளாகும்.

by Admin / 14-02-2026 07:05:25pm
தமிழக வெற்றி கழக விருப்ப மனுக்களை தயாா் செய்து சமர்ப்பிர்க்க பிப்ரவரி 20, 2026 அன்று கடைசி நாளாகும்.

தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை சமர்ப்பிப்பதற்கான கால் அவகாசத்தை பிப்ரவரி 20 வரை நீடித்திருப்பதாக கட்சி பொதுச் செயலாளர் என் ஆனந்த் அறிவித்துள்ளார். விருப்ப மனுக்களை தயாா் செய்து சமர்ப்பிர்க்க பிப்ரவரி 20, 2026 அன்று கடைசி நாளாகும். விருப்ப  மனு விநியோகம் பிப்ரவரி ஆறாம் தேதி தொடங்கி பிப்ரவரி 14-ம் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையி,ல் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நிர்வாக பணிகள் காரணமாக பெரும்பாலான தொண்டர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மனுக்களை சமர்ப்பிக்க முடியவில்லை என்ற கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் கொரியர் மூலமாகவோ சமர்பிக்கலாம்.என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

 

Tags :

Share via

More stories