லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

by Staff / 27-01-2023 03:53:34pm
லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

நாகர்கோவிலில் இரவு நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது கனிம வளம் ஏற்றிசென்ற லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ். பி உத்தரவிட்டார்.குமரியில் சோதனைச் சாவடிகளிலும் நெடுஞ்சாலை ரோந்து பணியிலும் தினமும் லட்சக்கணக்கான பணம் லஞ்சமாக பெறப்படுகிறது. இது தவிர மாதம் தோறும் லாரி உரிமையாளர்களிடமிருந்து பெருந்தொகை ஒரு சில காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், போலீசாருக்கு கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இருந்தும் சோதனை என்ற பெயரில் காவல்கிணறு முதல் களியக்காவிளை வரை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து போலீசார் பணம் பெற்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீஸாரால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறதே தவிர எந்த பலனும் இல்லை என பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

 

Tags :

Share via