துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகத் தொடர வாழ்த்துகள் தெரிவித்தார்

by Staff / 01-03-2025 01:11:27pm
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும்  மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகத் தொடர வாழ்த்துகள் தெரிவித்தார்

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மு.கருணாநிதி வழியில், கட்சியை வழிநடத்தும் திமுக தலைவர், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று, நல்லாட்சி நடத்துவதுடன் மொழியுரிமை, மாநில உரிமைகளை வலியுறுத்தி, இன்று இந்தியாவே நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

`இளைஞர் அணிதான் என் தாய்வீடு’ என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் கழகத்தலைவர் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம். மக்கள்நலன் போற்றும் திராவிட மாடல் ஆட்சி 2026-இல் மீண்டும் அமைந்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம்!


 

 

Tags :

Share via