30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார்.

by Editor / 25-10-2023 09:13:58am
 30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி, வரும் 30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அன்றைய தினம் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் செல்ல உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பசும்பொன்னில் அன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளதால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
 

 

Tags :  30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார்.

Share via

More stories

Logo