இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்:தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை.

by Editor / 25-10-2023 09:09:43am
இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்:தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதனிடையே சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரிதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தவுள்ளார்.

 

Tags : இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்:தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை.

Share via