தமிழக கேரள எல்லையில் அதிகாலை முதல் 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் தவிப்பு.

by Editor / 12-09-2024 09:04:49am
தமிழக கேரள எல்லையில் அதிகாலை முதல் 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் தவிப்பு.

தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் புலியறை வழியாக தினமும் கேரள மாநிலத்திற்கு 24 மணி நேரமும் அத்திவசிய பொருட்களான அரிசி பால் காய்கறி இறைச்சி கோழி உள்ளிட்டவைகள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன மேலும் 700க்கும் மேற்பட்ட கனிம வளம் ஏற்றிச்செல்லும் வாகனங்களும் சென்று வருகின்றன இந்த நிலையில் தற்போது ஓணம் பண்டிகை கேரள மாநிலத்தில் நெருங்கி வருவதை தொடர்ந்து தமிழகத்திலிருந்து காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்களும் அதிகரித்துள்ளது இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் புளியரையிலிருந்து கோட்டைவாசல் வரை உள்ள சாலையில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதன் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் புளியரை தாண்டி நீடித்தது இதேபோன்று ஆரியங்காவு அருகிலும் இந்த போக்குவரத்து ஏற்பட்டது தொடர்ந்து 5 மணி நேரமாக இரு மாநில எல்லைகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏராளமான பேருந்துக்களும்  வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளன தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்களும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும் சாலைகளை அடைத்து ஆங்காங்கே நிறுத்தி வைக்கபட்டு உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் ராட்சச கனிமவள வாகனங்கள் இடை இடையே புகுந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலும் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது போதிய போலீசார் இல்லாமல் வாகன நெரிசல் சீர் செய்யப்படாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர் கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளும் இந்த வாகன நெரிசலில்  சிக்கி உள்ளனர்.

 

Tags : தமிழக கேரள எல்லையில் அதிகாலை முதல் 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் தவிப்பு.

Share via