கழிவுநீர் வடிகால்களை சுத்தம் செய்யும் ரோபோ...

by Admin / 06-08-2021 01:02:25pm
கழிவுநீர் வடிகால்களை சுத்தம் செய்யும் ரோபோ...


 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த நிறுவனம், கழிவுநீர் வடிகால்களை சுத்தம் செய்ய ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளது.

சூரிய சக்தியால் இயங்கும் உலகின் முதல் ரோபோவான Xena 6.0-ல், கேமரா, ஜி.பி.எஸ். கருவி மற்றும் வாயுக்களை கண்டறியும் 19 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் அவலத்தைத் தடுக்கும் நோக்கத்துடன், இந்த ரோபோ வடிவமைக்கப்படுள்ளது.

இதுகுறித்து கூறிய அந்நிறுவனத்தின் அதிகாரி புவனேஷ் மிஷ்ரா, தங்களிடம் உள்ள Xena 5.0 ரோபோவை, மீட்பு நடவடிக்கைகள், தீயணைப்பு, விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார். அத்துடன் 200 கிலோ எடையை சுமந்து செல்லும் இந்த ரோபோவால், 100 கிலோ எடையை இழுத்து செல்ல முடியும் என அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via