பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்.

by Editor / 26-03-2025 12:06:41am
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் (48) இன்று (மார்ச்.25)   மாரடைப்பால் காலமானார். இந்த சம்பவம் திரையுலகினர் உட்பட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவருக்கு இதைய அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். தற்போது சென்னை சேத்துப்பட்டு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரை பிரபலங்களான நடிகர் கார்த்தி, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் ரவி மரியா, சேரன், இயக்குனர் ராம், உள்ளிட்ட பலர் வந்தவண்ணம் உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,பாஜக மாநிலத்தலைவர்,உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

 இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, அவரின் இறப்பிற்கு வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "என்னுடைய நண்பன் பாரதியின் மகன் மனோஜ் உயிரிழந்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது. மனோஜின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.

நடிகர்-இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரை கேசரினா டிரைவில் உள்ள இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு திரை உலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அவரது இறுதி சடங்கு நாளை மாலை 4:30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறும்.

 

 

Tags : பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்.

Share via