சென்னையில் வீட்டு ஓனர்களுக்கு.. காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

by Editor / 29-08-2021 12:00:04pm
சென்னையில் வீட்டு ஓனர்களுக்கு.. காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சொந்த வீடு வைத்துள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26-ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுவாக உள்ள உத்தரவு தான் இது. வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட, 15 நாட்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையங்களில், வாடகை தாரர்களின் பெயர், ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த முகவரி போன்ற விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் எழுதி, காவல் நிலையங்களில் அளிக்க வேண்டும்.

வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் போலீசுக்கு தெரிவிக்க தேவையில்லை . வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் காவல் நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும்.

 

Tags :

Share via
Logo