தமிழ்நாட்டில் கள் போதைப்பொருளானது எப்படி? - சீமான்

புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அது போதைப்பொருளானது எப்படி? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் அவர், "அது தமிழர் வாழ்வியலோடு கலந்தது பனைமரம். பரம்பரையாக பின்பற்றப்படும் தொழில் அது. நான் பனை மரம் ஏறியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தால், விசாரணையை எதிர்கொள்ளத் தயார். சாராய ஆலையைத் திறந்தால் நியாயம், நாங்கள் பனை மரம் ஏறினால் குற்றமா?" என்று ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
Tags :