இலங்கை வாலிபர் காவல்துறையினரிடம் வாக்குவாதம்

by Reporter / 14-09-2021 03:20:45pm
இலங்கை வாலிபர் காவல்துறையினரிடம் வாக்குவாதம்

இல0ங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் ஒருவர் நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் வே.விஷ்ணுவை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அந்த வாலிபர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து அந்த வாலிபரிடம் கேட்டபொழுது பெயர் விஜய் அஜய்குமார் அகதிகள் முகாம் மண்டபம் ராமநாதபுரம்  மாவட்டத்தில் வசித்து வருவதாகவும் தனது தாய் தந்தை உறவினர்கள் ஸ்ரீலங்காவில் வசித்து வருவதாகவும் தனது பத்து வயதில் தப்பித்தவறி அறியாத வயது தமிழகம் வந்துவிட்டேன் தற்போது வயது 32 ஆகிறது என்றும் தமிழ்நாட்டில் வாழ்ந்திட எனக்கு எவ்வித அடையாள அட்டை எங்கு சென்றும் கிடைக்கவில்லை என்றும் தமிழ்நாட்டில் வாழ்ந்திட அடையாள அட்டை உரிமைகள் யாதேனும் கிடைக்கவும் அல்லது இலங்கை செல்ல வழிவகை ஏற்படுத்தி எனது வாழ்க்கைக்கு வழிகாட்டி உதவுமாறு நெல்லை மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து மனு அளிக்க வந்ததாக கூறினார்

 

Tags :

Share via