எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு
நெல்லையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக வந்த முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ. ராஜூ தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.இதில் கழக அமைப்புச் செயலாளர் என் சின்னத்துரை, சி. த. செல்லப்பாண்டியன், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார், எட்டயபுரம் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு செயலாளர்கள் சிவசங்கர பாண்டியன், கார்டன் பிரபு, சின்னத்துரை, கன்னியப்பன், கருப்பசாமி, சொக்கன், மோகன், மகளிர் அணி நிர்வாகிகள் செல்வி, சாந்தி, ரத்தினம் உள்ளிட்டோர் பூங்கொத்து அளித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Tags :