குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 2ல் அனைத்து கட்சிக் கூட்டம்

by Staff / 26-11-2023 01:02:37pm
குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 2ல் அனைத்து கட்சிக் கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பா் 4ஆம் தேதி தொடங்கும் நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கூட்டத் தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனிடையே சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப்பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via