புதிய நூல் வெளியீட்டுவிழா

தமிழக விடியல் மாத இதழ் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் தமிழக விடியல் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் கே.எம்.முபாரக அலி அவர்கள் வரவேற்புரையாற்றினார். விழாவுக்கு
மடத்துக்குளம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி 4 ம் மண்டலக்குழு தலைவர் . இல பத்மநாபன் தலைமை தாங்கினார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் ,தமிழக விடியல் இதழை வெளியிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெற்றுக்கொண்டார்.
விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழக விடியல் ஆசிரியர் கே.எம். முபாரக் அலி நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.திராவிட இயக்க சிந்தனையாளர்கள் பொள்ளாச்சி உமாபதி காசு.நாகராஜன் கருத்துரையாற்றினார்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழக விடியல் இதழின் பொறுப்பாசிரியர் ஈ.முருகேசன் நன்றி கூற,
நாட்டுப் பண் இசையுடன் விழா நிறைவு பெற்றது.
Tags :