அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆலம்பாடி ஊராட்சி கொல்லப்பட்டி அருகே செட்டியூர் செல்லும் சாலையில் குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரியில் உடம்பில் கயிறுகள் கட்டப்பட்டு சடலம் மிதப்பதாக குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு குஜிலியம்பாறை காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரும் சென்று கல்குவாரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனர் சடலத்தை மீட்டதில் சுமார் 30வயது மதிக்கத்தக்க இளைஞர் அடையாளம் தெரியாத நபர் என்பதும் ஒரு வாரத்திற்கு முன்பு கல்லை கட்டி வீசி உள்ளது தெரிய வந்தது. மேலும் அவர் அணிந்திருந்த ஆடையில் ராம் பாய்ஸ் கபடி குழு காங்கயம் என்று எழுதப்பட்டுள்ளது.மேலும் சம்பவ இடத்திற்கு வந்த குஜிலியம்பாறை வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் ஆய்வு செய்ததில் இங்கு செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமாக ஆலம்பாடி மல்லபுரம் கோட்டநத்தம் சேர்வைக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது என்றும் இன்று இளைஞரை கல்லை கட்டி கொலை செய்யப்பட்ட கல்குவாரியில் கடந்த 10ஆண்டு காலத்தில் ஒரு இளம் பெண் உள்பட மூன்று பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு குவாரியில் வீசப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளதுஅடையாளம் தெரியாத அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உடல் கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Tags :