பிரதமரை சந்திப்பதை அவர் விரும்பவில்லை- முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்

பிரதமர் நரேந்திர மோடி மோடியை தாம் சந்திப்பதற்கு பல முறை அனுமதி கேட்டு கடிதம் எழுதி இருந்ததாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நேற்றுஅறிக்கை வாயிலாக தெரிவித்த நிலையில் ,அவர் எழுதிய கடிதம் தங்களுக்கு வரவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார் அதற்கு ஓ.பி.எஸ் உண்மையை பேசுங்கள் நைனார் நாகேந்திரன் என்றும் தான் பிரதமரை சந்திப்பதை அவர் விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார் இதற்கு பதில் தெரிவித்திருந்த பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் இதுவரை அவர் எழுதிய கடிதம் தனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்..இருவருக்கும் இடையே இது மோதலாக முற்றியுள்ளதாக அரசியல் நோக்கா்களால் பாா்க்கப்படுகிறது.
Tags :