மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் அமலாக்கத்துறைஉதவி இயக்குனர் ஆஜர் ..?

by Editor / 26-12-2023 10:37:48am
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் அமலாக்கத்துறைஉதவி இயக்குனர் ஆஜர் ..?

 

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய விவகாரம்: உதவி இயக்குனர் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் 11மணிக்கு ஆஜர் ஆவாரா..என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்த அங்கி திவாரி மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரியாக பணியாற்றி வந்தார். 

இவர் திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவரிடம் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடத்தாமல் இருப்பதற்காக 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர் பணிபுரியும் மதுரை அலுவலகத்தில் விடிய விடிய சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் டிசம்பர் 3ம் தேதி மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு ஒரு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.  அதில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த 35 பேர் சட்ட விரோதமாக வந்து சோதனை என்ற நடத்தி இங்கிருந்த ஆவணங்களை திருடி சென்று விட்டனர் என கூறியிருந்தனர். 

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தனர். அந்த புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறியிருந்தனர். இதையடுத்து அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பிரிஜேஸ் பெனிவால் உள்பட அன்றைய தினம் பணியில் இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

 

Tags : மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் அமலாக்கத்துறைஉதவி இயக்குனர் ஆஜர்..?

Share via