தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கிய போர் விமானம்

by Editor / 10-09-2021 11:20:59am
தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கிய போர் விமானம்

அவசர காலங்களில் போர் விமானங்களை சர்ச்சைக்குரிய பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் தரையிறக்கும் சோதனை தொடங்குகிறது. இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜாலூரில் இந்த ஒத்திகை நடைபெற்றது.

இந்திய விமானப்படையின் ஜாகுவார் மற்றும் சி-130 ஜெ (C-130J Super Hercules) ரக போர் விமானங்கள் இராஜஸ்தானில் உள்ள ஜாலூர் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கி, பின்னர் மீண்டும் மேலெழும்பி தனது விமானப்படை நிலையத்திற்கு செல்லவுள்ளது.

 ஒத்திகையில் போது சி-130 ஜே ரக விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாந் சிங், சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதி கட்கரி, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதாரியா ஆகியோர் விமானத்தில் பயணம் செய்கின்றனர்.

முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தும் கலந்துகொள்கிறார். இந்த விமானம் தற்போது எந்த விதமான சிரமமும் இன்றி தரையிறங்கியுள்ள வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo