தமிழகம், புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் அமல்

by Staff / 15-04-2023 11:44:13am
தமிழகம், புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் அமல்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15(இன்று) நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. இந்த தடைக்காலம் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இச்சமயத்தில் மீனவர்கள் தங்களின் படகுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இதே போன்று புதுச்சேரியிலும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடையால் கடலோர மாவட்டங்களில் மீனவர்களின் விசைப்படகுகள் துரைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

 

Tags :

Share via