போதை மாத்திரை கடத்தி வந்த 2 வாலிபர்கள் அரக்கோணம் ரயில் நிலையத்தில் கைது .

அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, அரக்கோணம் ரயில் நிலைய புதிய நடைமேடை அருகே சந்தேகப்படும் படியாக வந்த, இரு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் (21), சிப்காட் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் குமார்(22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில்,1082 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய் கணேஷ், ஹரிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் மும்பையில் இருந்து குறைந்த விலைக்கு போதை மாத்திரைகளை வாங்கி வந்து, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. இந்த, போதை மாத்திரை கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ?என்பது குறித்து பல்வேறு கோணங்களில் மது விலக்கு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : அரக்கோணம் ரயில் நிலையத்தில்