அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு  எதிராக விசாரணை நடத்தலாம்: நீதிமன்றம்

by Editor / 24-07-2021 07:23:42pm
அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு  எதிராக விசாரணை நடத்தலாம்: நீதிமன்றம்


 

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு எதிரான புகார்களுக்கு விசாரணை நடத்தலாம் என கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இகாமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மிக அதிகமாக விலையை குறைத்து விற்பனை செய்வதால் தங்களுடைய வியாபாரம் பாதிப்பதாக வணிகர் சங்கங்கள் இந்திய போட்டி ஆணையத்தில் புகார் அளித்தனர். 


இந்த புகாரை விசாரிக்க கூடாது என கர்நாடக மாநில நீதிமன்றத்தில் அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் மனு அளித்தன. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் மீண்டும் இதே மனுவை அளித்தன.


இந்த மனு விசாரணை முடிந்த நிலையில்  தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் இந்திய போட்டி ஆணையத்தின் விசாரணையை ஆரம்ப கட்டத்திலேயே முடக்குவது சரியாக இருக்காது என்றும், அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களின் அணுகுமுறைம் விசாரணை இறுதி கட்டத்தை வரக்கூடாது என்று உள்ளதாக தெரிகிறது என்றும் தெரிவித்தது. 


எனவே இந்த இரு நிறுவனங்களின் மனு விசாரணைக்கு கருத்தல்ல என்று மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனை அடுத்து அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் மீது இந்திய போட்டி ஆணையம் விசாரணையை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via