தமிழகத்தில் பேருந்துக்கள் இன்றி பயணிகள் தவிப்பு

by Editor / 28-03-2022 10:52:24am
தமிழகத்தில் பேருந்துக்கள் இன்றி பயணிகள் தவிப்பு

தொழிற்சங்கங்கள் நடத்தும் சங்க பொதுவேலை நிறுத்ததால் தமிழகத்தில்  முழுவதும் பேருந்துக்கள்,ஆட்டோக்கள்,கால்டாக்சிகள் ஓடவில்லை.மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.பள்ளி,கல்லூரி,மாணவ,மாணவியர்கள்,கூலித்தொழிலாளர்கள் என அனைத்துத்தரப்பு மக்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.வேலைநிறுத்தத்தில் முன்வைக்கப்படும் 12  அம்ச கோரிக்கைகள்

1.    தொழிலாளர் சட்டங்கள் (லேபர் கோட்ஸ்) என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதை ரத்துசெய். அதேபோன்று அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தையும் (EDSA - Essential Defence Services Act) ரத்து செய்க.

2.    வேளாண் சட்டங்களை ரத்து செய்தபோதிலும், சம்யுக்த கிசான் மோர்ச்சா முன்வைத்துள்ள இதர ஆறு கோரிக்கைகளையும் நிறைவேற்றுக.

3.    எவ்விதத்திலும் தனியார்மயத்தை அனுமதியோம். தேசியப் பணமாக்கும் திட்டத்தை ரத்துசெய்க.

4.    அங்கன்வாடி,‘ஆஷா’ ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்களுக்கும் இதரத் திட்ட ஊழியர்களுக் கும்  குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்குக.

5. முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவருக.

6.    வருமானவரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் உணவு மற்றும் வருமான ஈடாக அளித்திடுக.

7. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ஒதுக்கீட்டை அதிகப்படுத்து, இதனை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கிடுக.

8.     கொரோனா வைரஸ் தொற்றின்போது பணியாற்றிய முன்னணித் தொழிலாளர்கள் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் வசதிகளை அளித்திடுக.

9. வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் முக்கியமான பொதுப் பணிகளில் பொது முதலீட்டை அதிகரித்திடு.  பணக்காரர்கள் மீது செல்வ வரி விதித்திடு. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைத்திடுக.

10.    பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியைக் கணிசமாகக் குறைத்திடு. விலைவாசியைக் கட்டுப்படுத்திட உருப்படியான நடவடிக்கைகள் எடுத்திடுக.

11.    ஒப்பந்த ஊழியர்கள், திட்ட ஊழியர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடுக.

12. தேசியப் பணமாக்குத் திட்டத்தை ரத்து செய். அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவா. ஊழியர்  ஓய்வூதியத் திட்டத்தின் கீழான குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் கணிசமான குறைந்தபட்ச ஓய்வூதியம் அளித்திடுக.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும்,நாளையும் மறியல் போரட்டங்கள் தாலுகா,மாவட்ட தலைநகரங்ககளில் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் பேருந்துக்கள் இன்றி பயணிகள் தவிப்பு
 

Tags : Passengers suffering without buses in Tamil Nadu

Share via