ஜூன் 30ல் தொடங்குகிறது அமர்நாத் புனித யாத்திரை

by Staff / 28-03-2022 10:51:39am
ஜூன் 30ல் தொடங்குகிறது அமர்நாத் புனித யாத்திரை


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான  அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு நேற்று விவாதித்தது. 

இந்த ஆண்டுக்கான  அமர்நாத் யாத்திரை ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி 43 நாட்கள் நடைபெறும் என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு, காஷ்மீர் லெப்டினன்ட் ஆளுனர் மனோஜ் சின்ஹா ​​தலைமையில் நடைபெற்ற அமர்நாத்ஜி கோவில் வாரிய கூட்டத்தில் இந்த தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 வரவிருக்கும் யாத்திரையிலும் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக சின்ஹாவின் அலுவலகம் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

வழக்கம்போல், ரக்ஷாபந்தன் பண்டிகையன்று யாத்திரை முடிவடையும் எனவும் கொரோனா 
கட்டுப்பாடுகளுடன் யாத்திரை நடைபெறும் என ஆளுனர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.


 
 

 

Tags :

Share via