இந்தியா வளர்ந்த நாடாக மாற இது உதவும்
வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை இந்தியா 2047ம் ஆண்டுக்குள் அடைய தொழில்நுட்ப பயன்பாடு உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், நாட்டின் அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுவதை உறுதி செய்யும் நோக்கில், நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், கல்வி, விவசாயம் உள்பட பல்வேறு துறைகளில் இந்த தொழில்நுட்பம் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. பொதுமக்கள் சந்திக்கும் 10 பிரச்சினைகளை அடையாளம் காணுங்கள். அவற்றுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண முடியும் என கூறினார்.
Tags :