காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

by Staff / 18-03-2024 01:14:04pm
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் (தனித்தொகுதி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo