கார் மீது லாரி மோதி மூன்று பேர் பலி

by Editor / 15-06-2026 12:06:41pm
 கார் மீது லாரி மோதி மூன்று பேர் பலி

பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூர் பிரிவு பகுதியில், கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் இரண்டு பேர் சென்னை பெரம்பூரை சேர்ந்த சங்கர் (37) மற்றும் அரியலூர் மாவட்டம் சன்னாசி நல்லூரை சேர்ந்த விஜய் (30) என தெரியவந்துள்ளது. மேலும், தற்போது விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo