சீக்கியர்கள் நாடு கடமைப்பட்டுள்ளது பிரதமர் மோடி
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய மத பிரதிநிதிகள் பலரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். சீக்கிய சமூகம் சுதந்திர போராட்டத்தின் போதும் அதற்கு பின்பும் நாட்டுக்கு நிறைய சேவைகள் செய்துள்ளதாகவும் அதற்காக இந்நாடு அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவிலுள்ள சீக்கிய சமூகத்தினருக்கும் வெளிநாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார். பிரதமரின் இச்சந்திப்பு நடந்து கொண்டிருந்த போது பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் பெரும் வன்முறை நடைபெற்றது.
சிவசேனா கட்சியின் ஒரு பிரிவினர் காலிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியபோது மற்றொரு பிரிவினர் அவர்களை தாக்கினர். வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு நடந்த மோதலில் 4 பேர் காயமடைந்தனர். மோதலை கட்டுப்படுத்த காவல் துறையினர் வானத்தை நோக்கி சுட்டனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் முற்றியதை அடுத்து பட்டியாலா மாவட்டத்தில் இன்று மாலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
Tags :