ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by Editor / 06-12-2021 11:12:22pm
ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தலைமைச்செயலகத்தில்,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்திட்டத்தின் கீழ்,225ரூபாய் மானிய விலையில் மாடித்தோட்ட தளைகளையும்,ஊரகப்பகுதிகளில் காய்கறித்தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக 15 ரூபாய்க்கு 12 வகை காய்கறி விதைத்தளைகளையும்,நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்துத்தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ்,25 ரூபாய்க்கு 8செடிகள் அடங்கிய ஊட்டச்சத்துத்தளைகளையும் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில்,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமைச்செயலாளர்

வெ.இறையன்பு,இ.ஆ.ப. வேளாண்மை-உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமமூர்த்தி,இ.ஆ.ப.,தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை ஆர்.பிருந்தா தேவி, இ. ஆ. ப. மற்றும்அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்  ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 

Tags :

Share via