பள்ளிகளின் வளர்ச்சியைக் கொண்டாடும் பெற்றோர் - அமைச்சர் அன்பில் மகேஷ் புகழாரம்

by Staff / 07-02-2024 04:43:03pm
பள்ளிகளின் வளர்ச்சியைக் கொண்டாடும் பெற்றோர் - அமைச்சர் அன்பில் மகேஷ் புகழாரம்

பள்ளிகளின் வளர்ச்சியைக் கொண்டாடும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாபெரும் 2வது மண்டல மாநாடு இன்று திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பயிலும் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் ரூ.282 கோடிக்கும் மேலாக “பள்ளிச் சீர்” வழங்கியுள்ளனர்.எழுதுபொருட்கள் முதல் பள்ளிகளின் கட்டுமானத்திற்காக நிலங்கள் வழங்கியவர்கள் வரையிலான அனைத்துப் பெற்றோர்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo