அவமானத்தில் பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்த மோடி

by Staff / 13-04-2024 03:55:34pm
அவமானத்தில் பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்த மோடி

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை மோடி குறித்து விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், பாஜக பொய்யும் பித்தலாட்டமும் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இனி ஒருபோதும் இந்திய மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பல்வேறு குற்றப் பின்னணி உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சாரம் செய்தால் அவமானமாக போய்விடும் என தெரிந்து பிரதமர் மோடி தன்னுடைய பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார் என்றார்.

 

Tags :

Share via