எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் - திமுக அறிவிப்பு

by Staff / 03-02-2024 02:30:19pm
எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் - திமுக அறிவிப்பு

பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்காததை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு வளர்ச்சி சார்ந்த எந்த திட்டங்களும் இடம்பெறவில்லை என்றும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo